ஓசூர், நவ.15- ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “போதைக்கு எதிரான விழப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது.
PTA பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் முன்னெ டுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மூன்று வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.
தலைமையாசிரியை இரா.தேவசேனா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பாளராக திராவிடர் கழக மாவட்டத் தலைவரும் சமூக ஆர்வலருமான சு.வனவேந்தன் கலந்து கொண்டு 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும் “செல்போன் போதை” பற்றி விரிவாகப் பேசி, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கலந்துரையாடியது அனைவரை யும் கவர்ந்தது.
தொடர்ந்து உருது மொழியில் பேசிய பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவர் ஓசூர் நவ்ஷாத் அவர்கள் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே “Good touch – Bad touch” பற்றி விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மாணவர்களின் தாய்மார்க ளிடம் இருக்கும் தொலைக்காட்சி “சீரியல் போதை”க்கு எதி ராகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பி டத்தக்கது.
தொடர்ந்து 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாளும், +1 மற்றும் +2 மாணவர்களுக்கு மற்றொரு நாளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என PTA அறிவித்துள்ளது.
பெற்றோர் ஆசிரியர் கழக தலை வர் அய்யூப் கான், SMC இம்தாத் ஆகியோர் உடனிருந்தனர்.