பருவமழை…
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப் படுத்தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி வலியுறுத்தியுள்ளார்.
பரிந்துரை…
சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை 8இல் இருந்து 16 பெட்டிகளாக மாற்ற ரயில்வே நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மின் தேவை
ஒன்றிய மின்சார ஆணைய ஆய்வு அறிக்கையின்படி வரும் 2026-2027ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் உச்ச மின்தேவை 23,013 மெகா வாட்டாக இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப சீராக மின் விநியோகம் செய்வதற்கு கூடுதல் மின் வழித்தடங்களை ஏற்படுத்த அறிவுறுத்தப் பட்டுள்ளது.
வெள்ளத் தடுப்பு நிதி
தமிழ்நாட்டில் உலக வங்கி நிதியில், நீர்வள, நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏரிகள், கால்வாய்கள் சீரமைப்புப் பணிகள் நடைபெறும் இடங்களில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு ம்ட்டுமே நிதி வழக்க முடியும் என தெரிவித்தது.
அந்த இடங்களையும் அடையாளம் கண்டு அவற்றை சீரமைக்க அவசர கால சிறப்பு நிதியாக ரூ.449 கோடியே 59 லட்சம் வழங்க உலக வங்கி ஒப்புதல் தந்துள்ளது.
‘நான் முதல்வன்’ திட்டம்!
தமிழ்நாடு அரசினால் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், மாணவர்களுக்கு வெற்றிகரமான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து கலங்கரை விளக்கமாகத் திக்ழ்கிறது.
இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம், மாணவர்களுக்கு அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தந்ததுடன், தொழில்முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக பயிற்சிகள் அளித்து சாதனை புரிந்துள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 28.3 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.