புதுடில்லி,ஜூலை 27 – பேசுவதற்கு நம்பிக்கையில்லா பிரதமர் மீது இந்தியாவுக்கு எப்படி நம்பிக்கை வரும்? என்று மேனாள் காங்கிரஸ் அமைச்சரும், தற்போதைய சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், “நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடிக்கு நாடாளுமன்றத்தில் விளக் கம் அளிக்க நம்பிக்கை இல்லை. மணிப் பூரில் பெண்களுக்கு எதிரான குற்றங் கள் குறித்து மவுனம் காக்கிறார். பிரிஜ் பூஷண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்துகூறும் வரை அமைதியாகத்தான் இருந்தார். சீனாவால் இந்தியாவின் எப்பகுதி யும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்றார்.
இப்படியெல்லாம் நடக்கும் பிரதமர் மீது இந்தியா (I.N.D.I.A) நம்பிக்கை கொள்வது எப்படி?” என்று குறிப் பிட்டுள்ளார்.