ஜெய்ப்பூர், நவ. 16 ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டமன்றத்தில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும். இத்தேர்தலில் வெற்றி பெற தேசியக் கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.
முன்னதாக, மத்தியப் பிரதேசத் தில் ஒரு பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்படும் அலை பேசிகளையே பயன்படுத்துகின் றனர் என்றும் இதனை மாற்றி மத்தியப் பிரதேசத்திலேயே அலை பேசி தயாரிப்பை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதையே காங்கிரஸ் விரும்பு கிறது என்றும் அறிவித்திருந்தார். இது குறித்து தனது பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) சீனாவில் தயாரிக்கப்படும் அலைபேசிகளை மட்டுமே மக்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அட அறிவில்லாதவர்களின் தலைவரே, எந்த உலகில் இருக்கிறீர்கள்? இந்தி யாவின் வளர்ச்சியை மறைக்கும் அளவு எந்த வெளிநாட்டு கண் ணாடியை அணிந்து கொண்டு நிலை மையை பார்க்கிறீர்கள்? இந்தியாவின் சாதனைகளை புறக்கணிக்கும் அள விற்கு ஏதோ மன வியாதியில் காங் கிரசார் உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக “அறிவில்லாதவர்களின் தலைவன்” என விமர்சித்திருப்பதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார். அவர் இது குறித்து தெரிவித்த தாவது: “இது வருந்தத்தக்க செயல். பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை (dignity) உள்ளது. பிரதமரை அதிகம் விமர்சிக்கும் போது, அப்பதவிக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், அத் தகைய ஒரு மரியாதைக்குரிய பத வியை வகிக்கும் ஒருவரே (மோடி) இவ்வாறு பேசத் தொடங்கினால், அவரிடமிருந்து வேறு எதனை எதிர் பார்க்க முடியும்?” இவ்வாறு அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.
மகாராட்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், “அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆக போவது உறுதி என்பதால் மோடி ராகுலை கண்டு அஞ்சுகிறார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.