பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கைக்கு ஒப்புதல்! உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

1 Min Read

புதுடில்லி, நவ. 13- பள்ளி மாணவி களுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள்கை வகுக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆா்வலருமான ஜெயா தாக்குா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ஆறு முதல் 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் காலங் களில் பயன்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நாப்கின்கள் வழங்க வேண்டும். அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் உறைவிட பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கோரினார்.
இந்த மனு தொடா்பாக ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் பதிலளித்த ஒன்றிய அரசு, ‘நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் உள்பட 97.5 சதவீதத்துக்கும் மேற்பட்ட பள்ளி களில் மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன.

டில்லி, கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் (100%) மாணவிகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 99.7 சதவீத பள்ளிகளிலும், கேரளத்தில் 99.6 சதவீத பள்ளிகளிலும் மாண விகளுக்கு தனி கழிப்பறை வசதிகள் உள்ளன. வளரிளம் பருவ பள்ளி மாணவிகளுக்கு நாப்கின்கள் உள்ளிட்டவற்றை விநியோகிப்பதற்கான தேசிய கொள்கையை வகுக்கும் பணிகள் நிறைவடையும் கட்டத்தில் உள்ளன’ என்று தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு 11.11.2024 அன்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘பள்ளி மாணவிகளுக்கான தேசிய மாதவிடாய் சுகாதார கொள் கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வகுத்துள்ளது. அந்த கொள்கைக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் கடந்த நவ.2-ஆம் தேதி ஒப்புதல் அளித்தார்’ என்று தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *