இந்திய ரயில்வேயில் (வடக்கு) காலியாகவுள்ள 5,647 பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அப்ரென்டிஸ் நிலையிலானவை ஆகும்.
இதில் எஸ்சி பிரிவினருக்கு 879, எஸ்டி பிரிவினருக்கு 435 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப்பதிவு ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க டிச.3ஆம் தேதி கடைசி நாளாகும்.