பெரியாரியத் தோழர்கள் மு.சண்முகப்பிரியா-ந.நவின்குமார் ஆகியோரின் ஜாதி மறுப்புத் திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் (நாகம்மையார் அரங்கு) இன்று (13.11.2024) நடைபெற்றது. பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் அறிமுக உரையாற்றினார். தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகத்தின் இலக்கு இயக்குநர் அய்யன் கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமையேற்று இணையேற்பை நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.