ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
2 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

27.7.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்    

* மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடி அவையில் அறிக்கை அளித்திட, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் வலியுறுத்தல். எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நியாயமானதே என கருத்து.

* எதிர்க்கட்சிகள் இலக்கு இல்லாதவர்கள் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு கார்கே கண்டனம்.  மாநிலங்களவையில் தனது ஒலி வாங்கி நிறுத்தப்பட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார்.

* மோடி அரசு மீது காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அவையில் விவாதிக்க அவைத்தலைவர் அனுமதி.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

* மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கருப்பு உடை அணிந்து இன்று நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்      

* செவிலியர் படிப்புகளில் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது

தி இந்து              

* இட ஒதுக்கீட்டை அழித்துவிடும் என்பதால், பொது சிவில் சட்டத்தை எந்த வடிவத்தில் அறிமுகப்படுத்தினாலும் எதிர்ப்போம் என முஸ்லிம், கிறிஸ்தவம் மற்றும் சீக்கிய சமூகங்கள், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகங்களின் பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின அமைப்புகளின் கூட்டமைப்பு சூளுரை.

தி டெலிகிராப்

* மணிப்பூரில் குக்கிகளுக்கு எதிரான அட்டூழியங்களுக்கு எதிராக ஆதிவாசிகள் நாளை வெள்ளிக்கிழமை வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த உள்ளனர்

* ‘இந்தியாவின் அழகான, புனிதமான பெயரின் மீது உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு?’ என பிரதமரிடம் சித்தராமையா கேள்வி. பல நூறு கோடி இந்தியர்களின் வரிப் பணத்தை கொள்ளையடித்து நாட்டை விட்டு ஓடிய நிரவ் மோடிக்கும், லலித் மோடிக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இவர்களை மோடியுடன் ஒப்பிட முடியுமா என்றும் கேள்வி.

டைம்ஸ் ஆப் இந்தியா

* உயர்கல்வியில் சேர்ந்து படிப்பை கைவிட்ட 32000 மாணவர்களில் பாதிப் பேர் இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் என மோடி அரசு நாடாளுமன்றத்தில் தகவல்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *