மதுரை, நவ. 13- 10.11.2024 அன்று காலை 11மணிக்கு மதுரை புறநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட் டம் மாவட்டச் செயலாளர் பா.முத்துக் கருப்பன் இல்லத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி செயலாளர் இரா.கலைச்செல்வி வரவேற்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் கொள்கைக்கு இன்று ஏற்பட்டுள்ள வரவேற்பினையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பினையும்,பெரியார் உலகம் அமையவுள்ள சிறப்பினையும், கழகத் தோழர்கள் மேற்கொள்ளவேண்டிய கடமைகளையும் சுட்டிக்காட்டி தொடக்கவுரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை வே.செல்வம் தமது உரையில், “தமிழர் தலைவர் அவர்களின் தனிச் சிறப்புகளையும், அவரது தலைமை யின்கீழ் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்து நமக்கு மிகுந்தபெருமையாகும்” என குறிப்பிட்டார்.
நிறைவாக உரையாற்றிய மாநில வழக்குரைஞரணி துணைச்செயலாளர் வழக்குரைஞர் நா.கணேசன் ‘‘விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு இதழ்கள் வேண்டுவோர் தெரிவியுங்கள்… தமிழர் தலைவர் 92 -ஆவது பிறந்தநாள் மகிழ் வாக சந்தா செலுத்துகிறேன்” என கூறி மகிழ்ந்தார்.
கூட்டத்தில் திராவிடர் தொழிலாளர் பேரவைத் தலைவர் கா.சிவகுருநாதன், பொதுக்குழு உறுப்பினர் அ.மன்னர் மன்னன், மாவட்டத் துணைத்தலைவர் அழ.சிங்கராசு, நகரசெயலாளர் சி.பாண் டியன், பகுத்தறிவாளர் கழகத்தலைவர் வீரராகவ தங்கத்துரை, வட்ட மகளிரணி தலைவர் பெ.பாக்கியலெட்சுமி, மகளிர் பாசறை பொறுப்பாளர் போ.காவேரி, மாவட்ட திராவிடமாணவர்கழகத் தலைவர் ஏ.பி.சாமிநாதன், பா.சதீஷ்குமார், மாணவர்கள் ச.அறிவுப்பாண்டி, முத்துக்குமார்,சந்தோசு, மாதேசு, மதன் குமார்,சுஜித்ரா,முத்து, கவின் மாறன் ஆகியோர் கருத்துரை வழங் கினார்கள். அனைவரும் தமிழர் தலைவரிடம் பெரியார் உலகத்திற்கு நிதியளித்து வாழ்த்தி மகிழ்வோம் என தெரிவித்தார்கள்.
இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
நவம்பர் 26இல் ஈரோட்டில் நடை பெறும் சுயமரியாதை இயக்கம்,குடிஅரசு நூற்றாண்டு விழாவில் பங்கேற்பது எனவும்,
டிசம்பர் -2இல் சென்னையில் நடை பெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92-ஆவது பிறந்தநாள் விழாவில் குடும்பத்துடன் பங்கேற்று பெரியார் உலகத்திற்கு நிதியளித்து வணங்கி வாழ்த்தி மகிழ்வதென தீர்மானிக்கப்பட்டது.
இறுதியில் மாவட்டச்செயலாளர் பா.முத்துக்கருப்பன் தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவை பதினாறு கிளைக் கழகத்திலும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி கொண்டாடுவோம் என தெரி வித்து நன்றி கூறினார்.