புதுடில்லி, நவ.12- சிறுவர் களுக்கு மது விற்கப்படுவதை தடுக்கும்வகையில், மதுக்கடை களில் மது வாங்குபவர்களின் வயதை கட்டாயம் பரிசோதிக்க கொள்கை வகுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
‘மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவ தற்கு எதிரான சமூகம்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. அதில் கூறப் பட்டிருப்பதாவது:-
மதுபான கொள்கையை அமல்படுத்தி வரும் ஒவ்வொரு மாநிலத்திலும் மது அருந்த வயது கட்டுப்பாடு உள்ளது. குறிப்பிட்ட வயதுக்கு கீழ் இருப்பவர்கள் மது அருந்துவதும், வைத்திருப்பதும் சட்டவிரோதம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், மது வாங்குபவர்கள் மற்றும் அருந்துபவர்களின் வயதை பரிசோதிக்க எந்த விதிமுறையும் இல்லை. பல்வேறு வெளிநாடுகளில் வயதை சரிபார்க்கும் நடைமுறை உள்ளது. அது போல், இந்தியாவிலும் மது வினியோகிக்கப்படும் இடங்களான மதுக்கடைகள், மதுபான விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உள் ளிட்ட இடங்களில் மது வாங்குபவர்கள் மற்றும் மது அருந்துபவர்களின் வயதை கட்டாயம் பரிசோதிப்பதற்கான நடைமுறையை உருவாக்க வேண்டும்.
அதற்கான வலுவான கொள்கையை வகுக்க வேண்டும். ‘பயோமெட்ரிக்’ தரவுகள் மூலம் அடையாள அட்டையை ஒப்பிட்டு வயதை சரிபார்க்கலாம். சிறுவர்களுக்கு மது விற்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமோ அல்லது 3 மாத சிறைத்தண்டனையோ அல்லது இரண் டும் சேர்த்தோ விதிக்கலாம். அதன்மூலம், குறைந்த வயதுடையவர்கள் மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமை ஆவதை தடுக்கலாம். குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம். சில மாநிலங்கள், வீடுகளுக்கே நேரடியாக மது வினியோகிக்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தெரிகிறது. அப்படி செய்தால், குறைந்த வயதுடையவர்கள் மது அருந்துவதை ஊக்குவிப்பது போல் ஆகி விடும். அத்திட்டத்தை அமல்படுத்தக்கூடாது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில், 70 சதவீத விபத்துகள், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதால்தான் ஏற்படுகின்றன. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தாக்கீது
இந்த மனு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கு மாறு ஒன்றிய அரசுக்கு தாக் கீது அனுப்ப நீதிபதிகள் உத்தர விட்டனர். அடுத்த கட்ட விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.