40 மாதங்களில் நடந்த பணிகள்
திட்டம் தொகை (ரூ.கோடி)
தேசிய ஊரக திட்டம் 968.68
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி 2,808.00
19,450 கி.மீ சாலைகள், பாலங்கள் 10,584.00
3,29,906 ஊரகக் குடியிருப்புகள் 3,958.87
கான்கீரிட் கூரைகள் அமைப்பு 3,958.00
1,00,000 புதிய கான்கிரீட் வீடுகள் 3,500.00
ஊராட்சி அலுவலக கட்டிடங்கள் 594.00
சமத்துவபுரங்கள் சீரமைப்பு 262.00
8 புதிய சமத்துவபுரங்கள் 50.00
1,00,466 குடியிருப்புகள் பழுதுநீக்குதல் 832.00
சென்னை, நவ.12- வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களால் கிராம வளர்ச்சியில் இந்தி யாவிற்கே, தமிழ்நாடு முன் னோடியாக இருக்கிறது என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சி அமை யும்போது எல்லாம் கிராமப் புறங்களின் அடிப்படை கட்ட மைப்பு வசதிகள் மேம்படும் வகையில் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 40 மாத கால திராவிட மாடல் ஆட்சியில் கிராமப்புறங்களில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து 12,525 கிராம ஊராட்சிகளிலும் கணினிகள், பிரிண்டர்கள், யு.பி.எஸ். ஆகியவை நிறுவப்பட்டு ஊராட்சி அலுவலகங்களில் பயன்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. இணையதளம் வாயிலாக அரசுச் சேவைகள் சொத்து வரி, குடிநீர் கட்டணம். தொழில்வரி, திட்ட அனுமதி, மனைப்பிரிவு அனுமதி மற்றும் கட்டட அனுமதி போன்ற சேவைகள் அளிக்கப்படுகிறது.

காந்தி விருது
கிராம ஊராட்சிகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் நிதி வரம்பு ரூ.2 லட்சம் என்பது ரூ.5 லட்சமாகவும், வட்டார ஊராட்சிகளுக்கு, ரூ.10 லட்சம் என்பது ரூ.25 லட்சமாகவும், மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ.20 லட்சம் என் பது ரூ.50 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.
மாநிலத்தில் சிறப்பாகச் செயல்புரியும் கிராம ஊராட்சி களுக்கு உரிய அங்கீகாரத்தினை வழங்கும் விதமாக உத்தமர் காந்தி விருது வழங்கப்படுகிறது. அந்த கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சத்திற்கான ஊக்கத் தொகையுடன், மாவட்டத்திற்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ஊரகப் பகுதி சுகாதாரப் பணியாளர்கள் நலனுக்காக 2022-2023ஆம் ஆண்டில் ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டன. தெருவிளக்குகளை தானியங்கி முறையில் பராமரிக்க செங் கல்பட்டு மாம்பாக்கம், நெல்லை கருங்காடு ஆகிய 2 ஊராட்சிகளிலும் சோதனை முயற்சி மேற் கொள்ளப்படு கின்றன. ஊராட்சி பிரதிநிதிகள், பொதுமக்களுக்கு உதவிட உதவி மய்யம் அமைக் கப்பட்டுள்ளது.

ஊரக வேலை வாய்ப்பு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட் டம், 2021ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளிலும் பெண்கள் 86.26சதவீதத்திற்கும், மாற்றுத் திறனாளிகள் 2,95,664 பேரும், ஆதிதிராவிடர்கள் 29.59 சதவீதத் தினரும் பயன் பெற்றுள்ளனர்.
3 ஆண்டுகளில் ரூ.34,609.44 கோடியில் 10 லட்சத்து 11 ஆயி ரத்து 334 குடும்பங்கள் 100 நாள்கள் வேலை செய்து பயன் பெற்றுள்ளனர். இந் தாண்டில் ரூ.6,359 கோடி ஒதுக்கீட்டில் 100 நாள் வேலைகள் நடைபெறுகின்றன.
முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராமச் சாலைத் திட்டம், தமிழ்நாடு ஊரகச் சாலைகள் மேம்பாட் டுத் திட்டம் (TNRRIS) மற்றும் நகர்ப்புறத்தை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் சாலை மேம்பாடு ஆகிய திட்டங்களின் கீழ் 40 மாதங்களில் 18,899 கி.மீ நீளமுள்ள 14,262 சாலைப்பணிகள் மற்றும் 83 பாலங்கள் மேற்கொள்ள ரூ.9,030 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 13,733 கி.மீ நீளமுள்ள 11,460 சாலைகள் மற்றும் 22 பாலங்கள் ரூ.5,219 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.

கலைஞர் கனவு இல்லம்
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2024-2025ஆம் ஆண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒரு வீட்டிற்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.
தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திலும் பாதுகாப்பான கழிப்பறை வசதிகள் பெறும்பொருட்டு கடந்த 2021ஆம் ஆண்டு முதல் இது வரை 2,43,770 குடும்பங்களுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வினி யோகம் செய்வதே ஜல்ஜீவன் இயக்கத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் கீழ் கிரா மப்புறங்களின் 71 லட்சத்து 51 ஆயிரத்து 339 வீடுகளுக்கு ரூ.2,123.36 கோடியில் குடிநீர் இணைப்புகள் வழங் கப்பட்டுள்ளன. இப் படி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் முதலமைச் சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவிற்கே வழிகாட்டும் மகத்தான திட் டங்கள் பலவற்றைச் சிறப்பாக நிறைவேற்றி வெற்றிகண்டு வரலாறு படைத்து வருகின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.