திருவள்ளூர், நவ. 12- திருநின்றவூர் ஜெயா கலைக்கல்லுாரியில் வரும் 16இல் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும், 16இல் திருநின்றவூர் ஜெயா கலை கல்லுாரியில் நடக்கிறது. முகாமில் 200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான 15,000க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களை நிரப்ப உள்ளனர். முகாமில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னனி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
முகாமில் 8, 10, 12ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, அய்.டி.அய்., மற்றும் டிப்ளமோ, பொறியியல், செவிலியர் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ளோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளளலாம்.
தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.