திருப்பூரில் அமைக்கப்படும் புறநகர் பேருந்து நிலையத்திற்கு பெரியார் பெயரை வைக்க கோரிக்கை
திருப்பூர், நவ.12- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 10.11.2024 ஞாயிறு காலை 10.30 மணியளவில் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிக்கம்பம் பெரியார் படிப்பக வளாகத்தில் நடைபெற்றது
திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமை ஏற்று ஈரோடு மாநாடு குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழா குறித்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய பணிகளை குறித்தும் எடுத்துரைத்தார்
திருப்பூர் மாவட்டத்தில் கழகப் பிரச்சாரப் பணிகளை தொய்வின்றி தொடர்ந்து நடந்திட மாதம் ஒரு பிரச்சார கூட்டத்தை நடத்திட வேண்டும் என வலியுறுத்தி உரையாற்றினார்
தொடர்ந்து திருப்பூர் மாவட்ட செயலாளர் குமரவேல்,திருப்பூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் துரைமுருகன்,திருப்பூர் மாநகரச் செயலாளர் செல்வ ராஜ்,திருப்பூர் மாநகர தலைவர் கருணாகரன்,பகுதி செயலாளர் சுதன்ராஜ்,பகுத்தறிவு இலக்கிய அணி பொறுப்பாளர் நளி னம் நாகராஜ்,திராவிட மக ளிர் பாசறை செயலாளர் கிருஷ்ணவேணி, அவிநாசி நகர பகுத்தறிவாளர் கழக தலைவர் முத்து.சரவணன்,மாவட்ட துணை தலைவர் முத்து.முருகேசன்,மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் நாச்சி முத்து,மாநில இளைஞரணி துணை செயலாளர் வெற்றிவேல், மாவட்ட தலைவர் யாழ்.ஆறுச்சாமி, மாவட்ட காப்பாளர் அவிநாசி ராமசாமி ஆகியோர் கருத்துரை ஆற்றினர்
கூட்டத்தில், நவம்பர் 26 ஈரோட்டில் நடைபெறும் குடிஅரசு இதழ் நூற்றாண்டு சுயமரியாத இயக்க நூற்றாண்டு மாநாட்டில் திருப்பூர் கழக மாவட்டத்தில் இருந்து தனி வாகனத்தில் குடும்பத்துடன் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் (சுயமரியாதை நாள்) சென்னையில் திருப்பூர் கழக மாவட்டத்திலிருந்து பெருந்திரளாக பங்கேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை சந்தா மற்றும் பெரியார் உலக நிதியை வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பது எனவும்,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூர் கழக மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது மரக்கன்று நடுதல் குருதிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தி மகிழ்வது எனவும்,
டிசம்பர் 24 அறிவுலக ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் நினைவு நாள் அன்று தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது அமைதி ஊர்வலம் நடத்துவது கழகக் கொடி ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளை திருப்பூர் மாவட்டத்தில் மிக சிறப்பாக நடத்துவது எனவும்,
டிசம்பர் 28,29 திருச்சியில் நடைபெறும் உலக பகுத்தறிவாளர் மாநாட்டில் திருப்பூர் கழக மாவட்டத்திலிருந்து பெருந்தி ரளாக பங்கேற்று சிறப்பிப்பது எனவும்,
2024 டிசம்பர் மாதம் முதல் திருப்பூர் கழக மாவட்டத்தில் மாதம் ஒரு பிரச்சாரக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது எனவும், தலைவர் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 17 அன்று திருப்பூரில் மாபெரும் பெரியார் பட ஊர்வலத்தை மிக சிறப்பாக நடத்திய கழக பொறுப்பாளர்கள் தோழர்களுக்கு கூட்டம் பாராட்டை தெரிவித்த கொள்கிறது எனவும்,
திருப்பூர் கோயில்வழியில் புதிதாக அமைக்கப்படும் புற நகர் பேருந்து நிலையத்திற்கு தந்தை பெரியார் பெயரை வைத்திட வேண்டுமாறு திருப்பூர் மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசை திருப்பூர் மாவட்ட திராவி டர் கழகம் வலியுறுத்துகிறது என வும், டிசம்பர்-21 அன்று திருப்பூர் கொங்கு முதலமைச்சர் கொடிக் கம்பம் பகுதியில் தந்தை பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் திறப்பு விழா மற்றும் அன்று இரவு நத்தக்காடையூரில் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கழக துணைப் பொதுச்செயலாளர் சே.மெ. மதிவதனி ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
பெரியார் உலகத்திற்கு நன்கொடை அறிவித்தோர்:
முத்து.முருகேசன் ரூ.10,000, குமரவேல் ரூ.5000, செல்வ ராஜ் ரூ.5000 ,சுதன்ராஜ் ரூ.5000, துரைமுருகன் ரூ.1000, கிருஷ்ண வேணி ரூ.1000, நாச்சிமுத்து ரூ.5000.