சென்னை, நவ.12- ‘யாருடைய ஆட்சியில் சிறந்த திட் டங்கள் வந்துள்ளது என்பது பற்றி எடப்பாடி பழனிசாமியுடன் விவாதிக்க நான் தயார்’ என்று துணை முதலமைச் சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் பதிலடி
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில், யாருடைய ஆட்சியில் சிறந்த திட்டங் கள் வந்துள்ளன?என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஒரே மேடையில் விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன் என்று சவால் விடுத்திருந்தார்.
இதுகுறித்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 10.11.2024 அன்று நடைபெற்ற விழாவில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் கேள்வியை எழுப்பி அரசின் சார்பில் யாராவது விவாதத்தில் பங்கேற்பார்களா? அல்லது முதலமைச்சர் பங்கேற்பாரா? என்று கேட்டதற்கு, ‘என்னை கூப் பிட்டால் நான் போவேன்’ என்று அதிரடி யாக கூறினார்.
பின்னர் அவரிடம், அரசின் திட்டங்களுக்கு கலைஞரின் பெயரை வைப்பதை எடப்பாடி பழனி சாமி விமர்சித்துள்ளாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ‘வேறு யார் பெயரை வைக்க வேண்டும். விமர்சனங்கள் வரத்தான் செய்யும். யார் பெயரை வைக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். வைக்கிறோம்’ என்று பதிலளித்தார்.
‘சாம்பியன்ஸ் கிட்’
முன்னதாக விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ரூ.15 கோடி மதிப்பீட்டில் ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகம், ரூ.6 கோடி மதிப்பீட்டில் மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ஒலிம்பிக் அகாடமி கட்டடம் கட்டும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி படிக்கும் 553 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ‘சாம்பி யன்ஸ் கிட்’ தொகுப்பை வழங்கினார்.
விழாவில் அவர் பேசும் போது, “உங்களுக்கு (விளை யாட்டு வீரர்-வீராங்கனை கள்) நம் திராவிட மாடல் அரசு அனைத்து வகையிலும் துணை நிற்கும். இன்னும் பல திட்டங்களை நம் முதலமைச்சர் அவர்கள் தரவுள்ளார்கள். துணை முதலமைச்சராக, விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக மட்டுமல்லாமல் உங்கள் ஒவ்வொருவருடைய வீட்டுப் பிள்ளையாக, அண்ணனாக, உங்களுக்குத் தேவையான அனைத்து திட் டங்களையும் நான் நிச்சயம் பெற்றுத்தருவேன்” என்றார்.
விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாதரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலர்கள், பயிற்சியாளர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், விளை யாட்டுவீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.