தருமபுரி, நவ.11- தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கும் பணிக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
அதகப்பாடி, தடங்கம், அதியமான்கோட்டை, பாலஜங்கமனஅள்ளி கிராமங்களில் சிப்காட் தொழில் பூங்கா அமைகிறது. நில எடுப்பு பணிகள் முடிக்கப்பட்டு 1724 ஏக்கர் நிலம் சிப்காட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சிப்காட் தொழில் பூங்காவில் உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.14.08 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டது. சிப்காட் தொழில் பூங்கா அமைக்க ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்திருந்த நிலையில் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.