சென்னை, நவ. 11- மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் கல்வி நிறுவனங்களின் தகவல்களை வழங்கும் உதவி மய்யம் அமைக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கல்வி நிறுவனங்களில் மாணவ, மாணவியருக்கு வெளிப்படையான, பதிலளிக்கக்கூடிய மற்றும் அணுகுவதற்கு எளிமையான ஒரு சூழலை ஏற்படுத்தும் விதமாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் உதவி மய்யம் அமைக்கப்படும்.
கல்வி நிறுவனங்களுக்கு வருகை தரும் மாணவியர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அந்நிறுவனங்களில் வழங்கப்படும் ஆகியோருக்கு பட்டப்படிப்புகள், பட்டமேற்படிப்புகள், ஆராய்ச்சிப்படிப்புகள், மாணவர் சேர்க்கை பற்றிய விவரங்களை இம் மய்யம் மூலம் அறியலாம். துறை அலுவலகங்களின் அமைவிடம், அலுவலக நடைமுறைகள், தனியர்களின் கோரிக்கைகள் தொடர்பான முன்னேற்றம் போன்ற விவரங்களை ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள இது உதவும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அக்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து விவரங்களையும் நன்கு அறிந்த, அனுபவம் வாய்ந்த பணியாளர்களைக் கொண்டதாக உதவி மய்யம் இருக்கும். கல்லூரியின் முதன்மையான இடத்தில் இது ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார