சுயமரியாதைச் சுடரொளி தெய்வானை அம்மாள் முதலாம் ஆண்டு நினைவேந்தல் – படத்திறப்பு

viduthalai
1 Min Read

அறந்தாங்கி, நவ.11- அறந்தாங்கி கழக மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய கழக தலைவர் அத்தாணி நா.சிவசாமி அவர்களின் தாயார் சுயமரியாதைச் சுடரொளி நா.தெய்வானை அம்மாள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா 03.11.2024 ஞாயிறு அன்று நண்பகல் 12:00 மணி அளவில் திருவாப்பாடி ஆர்.ஆர்.திருமண மண்டபத்தில் அறந்தாங்கி கழக மாவட்ட தலைவர் க.மாரிமுத்து தலைமையிலும் மாவட்ட கழக துணைத் தலைவர் ப.மகாராஜா மணமேல்குடி ஒன்றிய கழக தலைவர் அ.நாகூரான் சமூக செயற்பாட்டாளர் சத்யா ஆகியோர் முன்னிலையில் கழக பொதுக்குழு உறுப்பினர் பெரியார் பெருந்தொண்டர் பள்ளத்தூர் அரு.நல்லதம்பி தெய்வானை அம்மையார் அவர்களின் படத்தினை திறந்து வைத்தார்.

சொற்பொழிவாளர் மாங்காடு சுப.மணியரசன் அம்மையார் அவர்களின் கொள்கை உறுதியினை விளக்கியும் சடங்கு சம்பிரதாயம் என்கின்ற பெயரில் புரோகிதம் செய்யக்கூடிய பார்ப்பனர்கள் நம்முடைய துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்ளாவிட்டாலும் வருமானம் பெறக்கூடிய கருமாதி திதி, திவசம் என்கின்ற பெயரால் நம்மிடம் எப்படி எல்லாம் நம்மை ஏமாற்றி நமது பணத்தை பறிக்கின்றனர் என்பதை விளக்கி உரையாற்றினார்.

படத்திறப்பு விழா நிகழ்வில் அத்தாணி ஊராட்சி மன்ற தலைவர் சோமசுந்தரம் தமிழக புரட்சிக் கழக நிறுவனத் தலைவர் அரங்க. குணசேகரன் பழைய நகரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி பகுதி பொறுப்பாளர் பெ.கருணா மூர்த்தி சலவையாளர் சங்க பேராவூரணி வட்டார தலைவர் நீலமேகம் பகுத்தறிவாளர் கழக தோழர் வல்லவாரி குழ.சந்திரகுமார் திராவிட மாணவர் கழகத் தோழர் ம.பண்பாளன் பத்திர எழுத்தர் இரா.அரங்கநாதன் உள்பட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர் கழக ஒன்றிய இளைஞரணி பொறுப்பாளர் சி.பிரபாகரன் நன்றி கூறினார்.

நிகழ்வினை கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா.நீலகண்டன் தொகுத்து வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *