துறையூர், நவ. 11- 9.11.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் துறையூர் விநாயகர் தெரு சமுதாயக் கூடத்தில் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்சு. சரண் ராஜ் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி சிறப்புரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞரணிதுணைத் தலைவர் த.ரஞ்சித் குமார் நன்றியுரை ஆற்றினார். கூட்டத்தில் வரும் நவம்பர் 26இல் ஈரோட்டில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வது. டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் 92 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடுவது. டிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்களை துறையூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் இர.வரதராஜன் வாசித்தார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் ச. மணிவண்ணன். மாவட்ட செயலாளர் ஜெ. தினேஷ் பாபு. நகர இளைஞரணி தலைவர் ந.இளையராஜா. நகர இளைஞரணி செயலாளர் இரா. ஸ்டாலின். மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ரெ.தன்ராஜ். மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் சே. விஷ்ணு வர்தன்.துறையூர் ஒன்றிய கழக செயலாளர் பா. பாரதி. இளைஞரணி செ. லோகநாதன். ந. தினேஷ். செ. சூர்யா. ரெ. பிரசன்னா. ச. சர் ஜூன். க. கபில் தேவ். கோர்ட் பெ.பாலகிருஷ்ணன்பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.