சென்னை, நவ.11- தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கிடும் வகையில் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ செயல்படுத்தப் பட்டு வருகிறது.
கடந்த 2022-2023ஆம் ஆண்டு முதல் இதுவரை தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 16 லட்சம் பேர் பயன் அடைந்து இருப்பதாக பள்ளிக் கல்வித் துறையின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
2025-2026ஆம் ஆண்டுக்குள் தமிழ் நாட்டை 100 சதவீதம் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் நோக்கில் இந்த திட்டம் தீவிரமாக செயல்படுத்தப் படுகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் (2024-2025) 6 லட்சத்து 14 ஆயிரம் பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக கணக்கெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு அரசு, அரசு உதவி பெறும் பள்ளி வளாகங்களில் அமைக்கப் பட்டுள்ள 30,113 கற்போர் எழுத்தறிவு மய்யங்களில் சேர்க்கப்பட்டு தன்னார் வலர்களின் உதவியுடன் கற்பித்தல் மற்றும் சுற்றல் செயல்பாடுகள் மேற் கொள்ளப்பட்டன.
அவ்வாறு எழுத்தறிவு மய்யத்தில் சேர்க்கப்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத 5 லட்சத்து 9ஆயிரத்து 459 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று (10.11.2024) தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது.
இவர்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட் டோர் நேற்று ஆர்வமுடன் வந்து தேர்வை எழுதினார்கள்.
வழக்கமாக தேர்வுக்கு பிள்ளைகளை பெற்றோர் அழைத்து வந்து பள்ளிகளில் விட்டுச் செல்வார்கள். ஆனால் நேற்று அடிப்படை எழுத்தறிவுத் தேர்வை எழுதுவதற்காக எழுதப் படிக்கத் தெரியாத பெற்றோரை, அவர்களு டைய பிள்ளைகள் பள் ளிக்கு அழைத்து வந்ததை சில இடங்களில் பார்க்க முடிந்தது