சென்னை,நவ.10 வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வரும் 15-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, அதே பகுதியில் நிலவுகிறது. அதன் தாக்கத்தால் இன்று (10.11.2024) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 2 நாட்களில் மேற்கு திசையில், தமிழ்நாடு – இலங்கை கடலோர பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், 11, 12-ஆம் தேதிகளில் ஒருசில இடங் களிலும்,13, 14, 15-ஆம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழை பெய்யும்
இன்று (10.11.2024) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதி களிலும், 11-ஆம் தேதி மேற்கண்ட பகுதிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.வரும் 12-ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்,
13-ஆம் தேதி மேற்கண்ட பகுதிகள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.வரும் 14-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், புதுக் கோட்டை, சிவகங்கை, ராமநாத புரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்களிலும், புதுச் சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 15-ஆம் தேதி மேற்கண்ட மாவட்டங்கள் (நீலகிரி, கோவை, திருப்பூர் நீங்கலாக) மற்றும் வேலூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
இடி மின்னலுடன் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடை, தக்கலை, கோழிப்போர்விளை, மயிலாடுதுறை மாவட்டம் கோடியக்கரையில் 9 செ.மீ.,கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு, பாலமோர், இரணியல், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 6 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம், முள்ளங்கினாவிளை, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடியில் 5 செ.மீ. மழை பதிவானது.தென் தமிழ்நாடு கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35-45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதி களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.