காற்றில் உள்ள பி.எம். 2.5 நுண் துகள்களால் குழந்தைகளின் கற்றல் திறனும் நினைவாற்றலும் பாதிக்கப்படுவதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 8,600 குழந்தைகளிடம் (9-11 வயது) நடத்திய ஆய்வில், காற்றில் உள்ள 15 ரசாயனங்களில் அம்மோனியம் நைட்ரேட் குழந்தைகளிடையே இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பெற்றோர்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.