செங்கல்பட்டு, நவ.10- செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். செங்கல்பட்டு பெரியார் தேநீர் கடை மேல் பகுதி பெரியார் படிப்பகத்தில் 3.11.2024 ஞாயிறு காலை 10 மணி அளவில் மாவட்ட கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் மு.அருண்குமார் தலைமையில், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத்குமார் முன்னிலையில், மாவட்ட இளைஞரணி தலைவர் செ.கவுதமன் வரவேற்புரை ஆற்ற தொடங்கியது, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தந்தை பெரியாரின் தத்துவங்களை உலகமயமாக்க 91 வயதிலும் ஓய்வின்றி உழைத்து வரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி காட்டும் வகையில் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் ஆற்ற வேண்டிய பணிகளை விளக்கி சிறப்பு ரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் செம்பி யன், மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் ம. நரசிம்மன், ஒன்றிய தலைவர் யாக்கோபு, மாவட்ட ப.க. தலைவர் அ. சிவகுமார், மாவட்ட ப.க. செயலாளர் சி.தீனதயாளன், பகுத்தறிவு ஆசிரியரணி சகாயராஜ் ஆகியோர் கருத்துரை ஆற்றினர், நிறைவாக தமிழர் தலைவர் அவர்களின் அறி விப்பிற்கிணங்க, மாவட்ட முழுவதும் கழகக் கொடிகள் ஏற்றுவதும், சிந்தனைப் பல கைகள் அமைப்பது, நகரங்கள் கிராமங்கள்தோறும் பிரச்சாரம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட தலைவர் செங்கை பூ.சுந்தரம் உரையாற்றி தீர்மானங்களை வாசித்தார், செங்கல்பட்டு நகர செயலாளர் கவிஞர் யாழன் அனைவருக்கும் நன்றி கூறினார்
கூட்டத்தில், பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக மாவட்ட இளைஞரணி சார்பில் நக ரங்கள், கிராமங்கள் முழுவதும் கிளைக் கழகங்கள் அமைத்துக் கழகக் கொடி ஏற்றுவது எனவும், மாவட்டம் முழுவதும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி துண்டறிக்கை வழங்கு வது எனவும், மாவட்ட முழு வதும் இளைஞரணி அமைப்பை உருவாக்கி புதிய இளைஞர்களை சேர்ப்பது எனவும், உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான ‘விடுதலை’க்கு இளைஞரணி சார்பில் சந்தாக்களை வழங்குவது எனவும், நவம்பர் 26 இல் ஈரோட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பெருந்திரளாக கலந்து கொள்வது எனவும் தீர்மா னிக்கப்பட்டது.