சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையாரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மாடம்பாக்கம் மாணிக்கம் நகரில் உள்ள க.மணிமாறன் இல்லத்தில் 8.11.2024 அன்று மாலை 5 மணியளவில் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமையில் நடைபெற்றது.க.செல்வமணி வரவேற்புரையாற்றினார். க.மணிமாறன் அறிமுகவுரையாற்றினார். ம.இந்திரா தேவி, செ.அறிவுச்சுடர், க.மேகலா ஆகியோர் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றினர். பெ.வள்ளியம்மையார், க.இரத்தினம், சந்திவீரன், ம.இராவணன், சு.உத்ரா, சுப்பிரமணி ஆகியோரது உரைக்குப் பின் நிறைவாக தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் நினைவேந்தல் உரை ஆற்றினார். மோ.அபர்ணா நன்றி கூறினார்.