சென்னை, ஜூலை 28 – தெற்கு ரயில்வே தலைமை மருத்துவமனை சென்னை பெரம்பூரில் அமைந்துள் ளது. இந்த மருத்துவமனையில் ரயில்வே ஊழியர்கள், ஓய்வு பெற் றோர், அவர்களின் குடும்பத்தினர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்களும் சிகிச்சை பெறுகின்றனர்.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப் பட்ட இந்த மருத்துவமனையில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாததால், அதே பகுதியில் புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு திறக்கப் பட்டது. அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தில் குருதி பரிசோதனை மய்யம் உள்ளது. இங்கு வரும் நோயாளிகள் அலைக் கழிக்கப்படுவதாக புகார் எழுந் துள்ளது. தினமும் 50 பேருக்கு மட்டுமே குருதி பரிசோதனை செய்யப்படுவதால், நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இது தொடர்பாக நோயாளிகள் கூறியதாவது: பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் குறிப்பாக, சிறுநீரகம் பாதிப்பு, டயாலிசிஸ் செய்பவர்கள், இதயபிரச்சினை, புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட நோயாளிகள் மாதத்துக்கு ஒரு முறை புறநோயாளிகள் பிரிவுக்கு சென்று குருதி பரிசோதனை செய்து விட்டு, மருத்துவர்களைப் பார்த்து சிகிச்சை பெறுகின்றனர்.
கரோனா காலத்துக்குப் பின்னர், புதிதாக திறக்கப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடத் தில் 2ஆ-வது மாடிக்கு குருதி பரி சோதனை மய்யம் மாற்றப்பட்டது. ஊழியர்கள் பற்றாக்குறையால், இந்த புதிய புறநோயாளிகள் பிரி வில் தினமும் 50 பேருக்கு மட்டுமே குருதிப் பரிசோதனை மேற் கொள்ளப்படுகிறது.
காலை 8 மணி அளவில் குருதி பரிசோதனை செய்யும் பணி தொடங்குவதால் சென்னை, திரு வள்ளூர், அரக்கோணம், திருத் தணி, சூலூர்பேட்டை, தடா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகாலை 4 மணிக்கே வந்து நோயாளிகள் காத்திருக்கின் றனர். 50 பேரை மட்டும் அனு மதித்துவிட்டு, மற்றவர்களை மறு நாள் வருமாறு திருப்பி அனுப்பி விடுகின்றனர். தொலைதூரத்தில் வரும் நோயாளிகள் அங்கேயே தங்கி மறுநாள் பரிசோதனை செய்கின்றனர்.
இந்த நோயாளிகளில் பெரும் பாலானோர் முதியவர்களாக இருப்பதால், அவர்களால் குருதி பரிசோதனைக்கு அதிகாலையிலேயே வரமுடிவதில்லை. உரிய நேரத்தில் மருத்துவர்களை பார்த்து சிகிச்சை பெற முடியாமல் வயதான நோயாளிகள் அலைக் கழிக்கப்படுகின்றனர்.
அதனால், ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே பரிசோதனை என்பதை கைவிட வேண்டும். தேவையான டெக்னீ சியன்களை நியமிக்கவேண்டும். பழைய கட்டடத்தில் இருந்ததை போல், இயந்திரம் மூலம் டோக்கன் வழங்கலாம்.
நோயாளிகளுக்கென்று தனித் தனி பதிவு எண் உள்ளது. நோயா ளிகள் பதிவு எண் மூலமாக மருத்து வர்களை சந்திக்க இணையத்தில் முன்பதிவு செய்யும் முறையை கொண்டு வரலாம். இந்த புதிய கட்டடத்தில் நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வெந்நீர் வசதி இல்லை. கழிப்பறைகள் சுத்த மாக பராமரிப்பில்லை. அடிப் படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.
தொலை தூரத்தில் இருப்பவர் கள் இந்த மருத்துவமனையில் வந்து டயாலிசிஸ் செய்து கொள்ள சிரமம் இருந்தது. அதனால், அவர் கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே டயாலிசிஸ் செய்வதற்காக சில தனியார் மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் உள்பட சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் நோயாளி களுக்கு வாரத்துக்கு இருமுறை 20 கிமீ, 25 கிமீ வரை சென்று டயாலிசிஸ் செய்ய வேண்டியுள்ளது. காவேரி மருத்துவமனையின் கிளை கோவிலம்பாக்கத்தில் திறக்கப் பட்டுள்ளது. கோவிலம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ள அதன் கிளை மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டால் தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் நோயாளி களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தவைவர் ஆர்.இளங்கோவன் கூறியதாவது: பெரம்பூர் ரயில்வே மருத்துவ மனையில் ரத்தப் பரிசோதனை நடத்த பணியாளர்கள் இல்லை. இதன்காரணமாக, தினசரி குறைவான நபர்களுக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுதவிர தாம்பரம், ஆவடி ரயில்வே மருத்துவமனையில் குருதி மாதிரி எடுக்க ஆய்வகம், போதிய ஊழியர்கள் இல்லாத நிலை உள்ளது.
எனவே, அங்கிருந்து பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு குருதி மாதிரி எடுக்க அதிக நோயாளிகள் வருகின்றனர். இங்கு குறைவான நபர்களுக்கு மட்டும் குருதி பரி சோதனை மேற்கொள்ளப்படுவ தால், மற்றவர்கள் திருப்பி அனுப் பப்படுகின்றனர்.
இதுதவிர, மருத்துவமனையில் உணவகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை. இதை கண்டித்து பெரம்பூர் ரயில்வே மருத்துவமனை முன்பாக, வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி யூனியன் சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.