கீழப்பாவூர், நவ.9- தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தலைமையில் 6.11.2024 அன்று மாலை 5 மணியளவில் நடைப்பெற்றது. கழக காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை சிறப்புரையாற்றினார்.
டிசம்பர் 2 “சுயமரியாதை நாள்” தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 92 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை டிசம்பர் 8 ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் கீழப்பாவூர் பெரி யார் திடலில் குடும்ப விழாவாக கொண்டாடுவது எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் “வாழ்வி யல் சிந்தனைகள்” நூல்களை விளக்கி தென்காசி மாவட்டத்தில் பிரச்சாரக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட செய லாளர் கை.சண்முகம், துணைத்தலைவர் ம.செந்தில்வேல், பொதுக்குழு உறுப்பினர் அய்.இராமசந்திரன், மாநில இளைஞரணி துணைச்செயலளர் அ.சவுந்திரபாண்டியன், முத்துக்குமார், இல.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘‘சுயமரியாதை நாள்’’ விழாவினை எழுச்சியுடன் கொண்டாட தென்காசி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
Leave a Comment