9.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ‘சிறுபான்மை தகுதியை மறுக்க முடியாது’: அலிகார் பல்கலை., வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு. உத்தரப்பிரதேசம், அலிகர் நகரில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சிறுபான்மையினர் தகுதி தொடர்பான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
*மகாராட்டிரா, ஜார்கண்ட் மாநில தேர்தல் இரு தத்துவங்களுக்கு இடையே நடைபெறும் தேர்தல், ராகுல் காந்தி பேச்சு. பழங்குடியினர் நிலங்களை கார்ப்பரேட்டுகளுக்கு கை மாற்ற பாஜக துடிக்கிறது என குற்றச்சாட்டு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாட்டின் பன்முகத்தன்மையே அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை பாதுகாக்கிறது’ என தலைமை நீதிபதி சந்திரசூட் என பேட்டி.
*அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்பை அகற்ற பாஜக, ஆர்எஸ்எஸ் விரும்புகின்றன: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.
தி இந்து:
* சிறு குறு தொழில்களை அழித்து ஏகபோகத்துக்கு வழிவகுத்த ரூபாய் நோட்டு தடை: நவம்பர் 8, 2016இல் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பின் 8ஆம் ஆண்டு நாளை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி விளாசல்.
* பாஜக அரசு அமைக்க முடியாத மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது. பீகாரில் ஆட்சியை கவிழ்க்க தவறிய போது, அவர்கள் முதலமைச்சரை பிடித்தனர்,” என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கைகோர்த்ததை குறிப்பிட்டு ஜார்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சமூகப் பொருளாதார வர்க்கங்களுக்கிடையில் மற்றும் கூட்டாட்சி அரசியலுக்குள் பரந்த பிளவுகளை நாம் காண்கிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை வளப்படுத்துவதை விட, அனைவரின் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என ஒன்றிய அரசின் மேனாள் அமைச்சரவைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் கருத்து.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஹிந்து வாக்குகளை திரட்டும் முயற்சியில் தனது 65 அமைப்புகளுடன் ஆர்.எஸ்.எஸ். மகாராட்டிராவில் தொடங்கியுள்ளது.
* வக்பு வாரிய சொத்துக்களை அபகரித்ததால் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்ததற்கு பாஜகவின் பெங்களூரு தெற்கு எம்பி தேஜஸ்வி சூர்யா மீது காவல்துறை வழக்கு பதிவு.
– குடந்தை கருணா