சென்னை, நவ.9- பல்வேறு அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப் பட்ட 246 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கருணை அடிப்படையில்….
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் 29 மாவட்டங்களில் 141 அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 754 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 17 ஆய்வகக் கட்டடங்கள் மற்றும் கழிப்பறைகள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ், கள்ளக்குறிச்சி மாவட்டம் பாச்சேரியில் கட் டப்பட்டுள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு – உறைவிடப் பள்ளிக் கட்டடம், பெரம்பலூர் மாவட்டம் மலையப்ப நகரில் கட்டப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவிஷ்ய வித்யாலயா உண்டு – உறைவிடப் பள்ளிக் கட்டடம் என மொத்தம் ரூ.171.16 கோடி செலவில் கட்டப் பட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் நேற்று (8.11.2024) திறந்து வைத்தார்.
மேலும், பள்ளிக்கல்வித் துறையில் பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 49 பேருக்கு கருணை அடிப்படையில் 43 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 6 தட்டச்சர்கள் பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
246 உதவிப் பொறியாளர்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு வாயிலாக பல்வேறு துறைகளில் உதவிப் பொறியாளர் பணியிடத் திற்கான தேர்வுக்கு 13.10.2023 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் தகுதியான வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப் பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டன.
அதன்படி தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தில் 96 பேரும், பொதுப்பணித் துறையில் 42 பேரும், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் 52 பேரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் 18 பேரும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் 38 பேரும், என மொத்தம் 246 பேர் உதவிப் பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேருக்கு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை தலைமைச் செயலகத்தில் நேற்று (8.11.2024) வழங்கினார்.
பங்கேற்றோர்
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுப்பணித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் பீலா வெங்கடேசன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் நந்தகுமார், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் மதுமதி, பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்