தூத்துக்குடி தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தூத்துக்குடி தொகுதியில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீனவர்கள்,
காய்கறி வியாபாரிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!
உங்களுக்கே என்றும் வெற்றி என்று மகிழ்ந்து வாழ்த்தினர்!

தூத்துக்குடி, மார்ச் 28- திமு கழகத் தலை வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 26.3.2024 அன்று காலையில் தூத்துக்குடி மாநகரில் நடைப்பயிற்சி மேற்கொண்டபடியே தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் கனிமொழி கருணா நிதி அவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் பணியையும் சிறப்பாக மேற்கொண் டார்கள்.
தமிழ்நாடு முழுவதும் தொடங்கும் அரசுப் பொதுத் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லோரும் சிறப்பாகத் தேர்வு எழுதி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியபடியே தூத்துக்குடி மாநகரில் காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்ற முதலமைச் சர் அவர்கள் அங்கு தம்மை எதிர் கொண்டு சந்தித்து வணக்கம் கூறிய மாணவ-மாணவிகளிடம் நன்றா கப் படித்து எதிர்காலத்தில் நீங்கள் எல்லாம் சிறந்து விளங்கவேண்டும் என வாழ்த் தினார். அப்போது, அவர்கள், முதல மைச்சர் அவர்கள் செயல்படுத்தும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல் வன் திட்டம் இரண்டும் எங்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கி றது. அதற்காக நன்றி என்று கூறி மகிழ்ந் தனர்.

அப்பொழுது முதலமைச்சர் அவர் களைச் சந்தித்த மகளிர் குழுவினர் தாங் கள் செயல்படுத்தும் மகளிர் உரிமைத் திட்டம் எங்களுக்கு மாதம் 1,000 ரூபாய் தருகிறது. நீங்கள் நல்லா இருக்கணும் என்று முதலமைச்சரை வாழ்த்தினார்கள்.

அப்படியே மீனவ கிராமங்களில் சென்று நடைப்பயிற்சியோடு வாக்குச் சேகரித்தார் முதலமைச்சர். அப்போது அன்போடு அவரை அழைத்த ஒரு மீனவர் இல்லத்திற்குச் சென்று அவர் கள் வழங்கிய தேநீரைப் பருகியபடியே மீனவர்களின் நலனுக்காக திராவிட மாடல் அரசு செயல்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் நினைவுபடுத்தினார். அது கேட்டு மகிழ்ந்த மீனவர்கள் உங் களுடைய கடுமையான முயற்சியினால் நீங்கள் நடத்திவரும் சிறப்பான ஆட்சியினால் தமிழ்நாட்டில் 40 தொகுதி களிலும் நாம் வெற்றி பெறுவோம். உங்களால்தான், புதுடில்லியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமையும் என்று உறுதிபடக் கூறினார்கள். அத்துடன் 10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டைப் பாழ் படுத்திய அதிமுகவுக்கும், எங்கள் தூத்துக்குடி பகுதி அடைந்த வெள்ளப் பாதிப்பிற்கு ஒரு பைசா கூட நிதி வழங்காமல் வாக்குக் கேட்க வருகின்ற பா.ஜ.க.வினருக்கும் நாங்கள் வாக்க ளிக்க மாட்டோம் என்று கூறியது கேட்டு முதலமைச்சரின் முகத்தில் புன் னகை அரும்பியது.

முதலமைச்சர் அவர்கள், அடுத்து தூத்துக்குடி காய்கறிச் சந்தைக்குச் சென் றார்கள். அங்கே அவரைக் கண்டதும் அங்கிருந்த காய்கறி வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஒரு கடையில் காலிபிளவர் விற்ற ஒரு மூதாட்டி முதலமைச்சர் அவர்களை வணங்கி உங்களுக்கே எங்கள் ஆதரவு என்றார். அப்படியே காய்கறி கடைகளை எல்லாம் ஒவ் வொன்றாகப் பார்த்துச் சென்ற முதல மைச்சர் அவர்களை வியாபாரிகள் எல்லாம் மகிழ்ச்சியோடு கைகுலுக்கி வரவேற்றார்கள். ஒரு கடையில் இருந்த அத்தனைபேரும் சேர்ந்து முதலமைச் சர் அவர்களுடன் கைகுலுக்கியது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

வெண்டைக்காய் கடை, அங்கிருந்த பானிபூரி கடை, வெங்காயக் கடை முத லான பல்வேறு கடைகளுக்கும் சென்ற முதலமைச்சர் அவர்களை மகிழ்ச்சி யோடு வரவேற்ற வியாபாரிகள். வேட் பாளர் கனிமொழி கருணாநிதி அவர்க ளைக் காட்டி, அவர்களுக்கே எங்கள் வாக்கு; உங்களுக்கே என்றும் வெற்றி என்று கூறி மகிழ்ந்தார்கள்.
குளச்சல் பகுதியில் பா.ஜ.க.வினரை துரத்தியடித்த மீனவ மக்கள். லயன்ஸ் டவுன் மீனவக் குடியிருப்பில் மீனவர் கள் எல்லாம் திரண்டு நின்று முதல மைச்சர் அவர்களை வரவேற்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

முதலமைச்சர் அவர்களின் இந்த நடைபயணத்தின் போது, வேட்பாளர் கனிமொழி கருணாநிதி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் ஆகி யோர் உடனிருந் தனர்.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *