மேகங்கள் உரசுவதால்
ஆகாயம் தேய்வதில்லை!
மேல் இடியோ விழுவதனால்
அதுஒன்றும் சாய்வதில்லை!
காகங்கள் கத்துவதால்
பொழுதேதும் விடிவதில்லை!
கண்ணிமையின் முடிஉதிர்ந்தால்
ஆள்பாரம் குறைவதில்லை!
கானல்நீர் பெருக்காலே
கடல் ஒன்றும் மூழ்காது!
கட்டெறும்பு ஊர்வதனால்
இமயமலை
சாயாது!
சூரியனைச்
சுட்டெரிக்க நட்சத்திரம்
கிளம்புவதா!
சுயபுத்தி
இல்லாமல்
ஏதேதோ
புலம்புவதா!
நெருப்புதனை
அணைப்பதற்கு
நெல்உமியா முயல்வதிங்கே!
எரிமலையை
வீழ்த்துதற்குச்
சருகுகளா
முனைவதிங்கே!
புலிக்கூட்டம்
திமுக!
புல்லர்களே
அறிந்திடுக!
எலிக்கூட்டம்
வந்து
எதிர் நிற்க
முடியுமா?
மு. க. ஸ்டாலின்
என்றால்
முத்தமிழின்
அணியாரம்!
முட்டாள்
கூட்டமெல்லாம் வெறும்
முட்டைப் பணியாரம்!
வெற்றியதைத்
திமுக வில்
விளைச்சல் செயும்
தமிழ்நாடு!
வீழ்த்த இதை முடியுமா உங்கள்
விக்கிரவாண்டி
மாநாடு?
– கவிஞர் கீரை பிரபாகரன்