சென்னை, நவ. 8- மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபடுவோருக்கான கோட்டை அமீா் பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. மத நல்லிணக்கத்துக்குப் பாடுபட்டு உயிர்நீத்த கோவையைச் சோ்ந்த கோட்டை அமீரின் பெயரால், கோட்டை அமீா் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் குடியரசு நாளன்று வழங்கப்படும் இந்த விருது ரூ.25,000 காசோலை, ஒரு பதக்கம், தகுதியுரை ஆகியவற்றை உள்ளடக்கியது. நிகழாண் டில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு வயது வரம்பில்லை.
விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா்கள் மூலமாகவோ அல்லது அரசு இணையதளத்தின் வழியாகவோ பெறலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரசு செயலா், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 என்ற முகவரிக்கு வரும் 25-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு புதன்கிழமை விடுத்த செய்திக் குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.