8.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* திராவிட மாடல் அரசின் திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 2026இல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும், கோவையில் கள ஆய்வுக்குப் பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
தி இந்து:
* துல்லியமான தரவு இல்லாமல், பிற்படுத்தப்பட் டோருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது என்ற எங்கள் இலக்கை அடைய முடியாது. தனி நபர்களின் தனிப்பட்ட தகவல்களை தவிர்த்து, ஜாதிவாரி கணக்கெடுப்பு தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் என ரேவந்த் ரெட்டி பேட்டி.
* உத்தவ் தாக்கரே வெளியிட்ட சிவசேனாவின் (UBT) தேர்தல் அறிக்கை, தற்போது உள்ள 50% இடஒதுக்கீடு வரம்பை நீக்குவதாகவும், அதானி குழுமம் மேற்கொள்ளப்படும் மும்பையில் உள்ள தாராவியின் குடிசைப் பகுதிகளை மீண்டும் மேம்படுத்தும் திட்டத்தை நிறுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 170 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 93 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள், 30 பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இல்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாக்பூர் மாநாட்டில் அரசியல் சாசன நகலை தான் காட்டுவது குறித்து தேவேந்திர பட்னாவிசின் சர்ச்சைக்குரிய கருத்து அம்பேத்கருக்கு அவமானம் என்று கூறிய ராகுல் காந்தி, அரசியலமைப்பின் மீதான பாஜகவின் தாக்குதலுக்கு மகாராட்டிரா மக்கள் பழிவாங்குவார்கள் என பதிலடி.
– குடந்தை கருணா