சென்னை, நவ.8- செப்டம்பர் 2ஆம் தேதி, உறுப்பினர் சேர்க் கைக்கான பணியைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க, தமிழ்நாட்டில் ஒரு கோடிப் பேரை உறுப்பினர்களாகச் சேர்க்க இலக்கு வைத்தது டில்லி
இதனை அடுத்து பா.ஜ.க-வில் ஒருங்கிணைப் புக்குழு, மாநில மய்யக்குழு அறிவுசார் குழு, ஜோசியக்குழு, வட்டிக்குப் பணம் தரும் (நிதி உதவிக்)குழு என இன்ன பிறகு சில்லை குழுக்கள் எல்லாம் இருக்கும் நிலையில், ‘ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்ப்போம்…’ என்ற சூளு ரையுடன் தனியாக ஏழு பேர்கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது.
ஆனால், மிஸ்டுகால் மூலமாக மட்டுமே தமிழ்நாடு பாஜகவால் உறுப்பினர்களைச் சேர்க்க முடிந்தது அப்படி மிஸ்டுகால் கொடுத்தும் சேர்ந்த நபர்கள் எண் ணிக்கை 5லட்சத்தை தாண்டவில்லை. ஏற்கெனவே இவர் கள் பல்வேறு தொழில திபர்களை மிரட்டி அந்தந்த நிறுவன ஊழியர்களுக்கு அடாவடியாக பாஜக உறுப்பினர் அட்டையைத் திணித்தும் பார்த்தனர். இந்த நிலையில் 8 லட்சத் தைத் தாண்டாமல் 10 லட்சத்திற்குள்ளேயே அடங்கி விட்டது.
பாஜக உறுப்பினர் சேர்க்கைப் பணிக்காக மருத்துவர்கள் உள்ளிட்ட சில பிரபலங்கள் கள மிறங்கியதால் அந்த பிரபலங்களுக்கு மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டதுதான் மிச்சம். இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கையில் எங்கே கோட்டைவிட்டீர்கள் என்று விளக்கம் கேட்டு தமிழ்நாடு பாஜக முக்கிய தலைவர்களை டில்லி அழைத்துள்ளதாம்.
டில்லி போய் என்ன சொல்வார்களோ!