கொள்கையை சொல்லி அழையுங்கள்-ஆட்சியில் பங்கு தருவதாக கட்சிகளை இழிவு படுத்தாதீர்கள் நடிகர் விஜய்க்கு கே.பாலகிருஷ்ணன் அறிவுரை

1 Min Read

மதுரை, நவ, 8- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவல கம் திறப்பு விழா, மதுரை புது ராமநாதபுரம் சாலை பகுதியில் 7.11.2024 அன்று நடந்தது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எதிர்வரும் நாடாளு மன்ற கூட்டத்தொடரில், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய சட்டத் திருத்த சட்டம் ஆகியவற்றை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றி ணைந்து, மோடி அரசின் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற விடாமல் தடுப்பார்கள்.

அதேபோல், வக்பு வாரியத்தை திருத்த அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர், அக்கமிட்டியின் உறுப்பி னர்களின் கருத்தை கேட்காமலேயே அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். நடிகர் விஜய்யின் புதிய கட்சி மற்றும் அவரது அறிவிப்புகளால் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்பட வில்லை. அவர் தனது கட்சியின் கொள்கைகளை கூறி, பிற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்க வேண்டும். ஆனால் அவர் ஆட்சியில் பங்கு இருப்பதாக கூறி அழைப்பு விடுப்பது தவறு. இது, பிற கட்சியினர் பதவியை தேடி ஓடிக் கொண்டிருப்பதாக கூறுவது போலவும், அவர்களை இழிவுபடுத் துவதும் போலவும் உள் ளது. இவ்வாறு கூறினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *