குரூப் 4 தேர்வு முடிவின்படி தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. கணினி வழித்திரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு, மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. நவ.9 – 21க்குள் www.tnpsc.gov.inஇல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
இ(எ)தையும் விட்டு வைக்காத அம்பானி
மொபைல் சேவை, எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், ரீடெயில் என நம் அன்றாட வாழ்க்கை தொடர்பான பல பிசினஸ்களில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்ஸ், விரைவில் ஸ்நாக்ஸ் பிசினஸிலும் இறங்க உள்ளது. முதல்கட்டமாக சிப்ஸ், பிஸ்கட்ஸ், இதர சேவரி ஸ்நாக்ஸ்களை அறிமுகம் செய்யவுள்ளது. சில்லரை வியாபாரிகளுக்கு அதிக மார்ஜின் அளிப்பதால் ரூ.42,694 கோடி ஸ்நாக்ஸ் மார்க்கெட்டில் பிரிட்டானியா, ஹல்டிராம் நிறுவனங்களுக்கு ரிலையன்ஸ் டஃப் கொடுக்கும்.
தமிழ் பாடலை பாடி அசத்தும்
வெளிநாட்டு பெண்
வேற்று மொழி பேசுபவர்கள் நமது மொழியை பேசுவதே தனி அழகுதான். அந்தவகையில், பப்புவா நியூ கினியா நாட்டை சேர்ந்த ஒரு பெண் தமிழ் பாடலை அழகாக பாடி அசத்தியுள்ளார். தனக்கு தமிழ் தெரியாது எனக் கூறும் அவர், பாடல் பிடித்ததால் மனப்பாடம் செய்து படிப்பதாக கூறுகிறார். ‘வாத்தி’ படத்தின் ‘ஒரு தல காதலை’, ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் ‘அனல் மேலே பனித்துளி’ பாடலை அவர் பாடியுள்ளார்.