சென்னை, நவ.8 தமிழ்நாட்டில் இன்று வெள்ளிக் கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித் துள்ளது.அதேசமயம், வங்கக்கடலில் அடுத்த இரு வாரங்களுக்கு புயல் உருவாக வாய்ப்பில்லை என இந்திய வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த அமைப்பு வடதுருவ குளிர் காற்றைத்தான் அதிகளவில் இழுக்கிறது. இதனால், சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் பனிப் பொழிவுக்கு இடையே குளிர்ந்த காற்றுடன் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், இன்று முதல் (நவ.8) முதல் நவ.13 வரை தமிழ் நாட்டில் அநேக இடங் களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின் னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புயல் உருவாக வாய்ப் பில்லை: நவம்பா் மாதம் 2 -ஆவது வாரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புயல்சின்னம் உருவாக வாய்ப்பில்லை என இந்திய வானிலை மய்யம் தெரிவித்துள்ளது. அதாவது 2 வார காலத்துக்கு வங்கக்கடலில் புயல் உருவாகாது எனக் கூறியுள்ளது.அதாவது, நிலநடுக ்கோட்டையொட்டிய பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங் கடல் பகுதியில் கடல் வெப்பநிலை தகவமைப்பு சார்ந்த நடுநிலை எல்நினோ நிலவுவதால் காற்று சாதகமின்மை உள்ளது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்கும் சாதக சூழல் எனப்படும் காற்றுச்சுழற்சி வலுவடைந்து தமிழ்நாடு கரையை நோக்கி நகர வாய்ப்பில்லை. இதனால், வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை போன்ற புயல்சின்னங்கள் அடுத்த 2 வாரங்களுக்கு உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.