நாட்றம்பள்ளி, நவ.8- அரசின் உதவியால் நிறைந்தது மனம், முதலமைச்சருக்கு நன்றிகள் என இரு குழந்தைகளின் தாயார் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட் றம்பள்ளி வட்டம், நாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த மலர் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனது இரு குழந்தைகளுடன் ஆட்சியர் க.தர்ப்பகராஜிடம் கோரிக்கை மனுவை வழங்கினார்.
மனுவில் இரு குழந்தைகளையும் படிக்க வைக்க இயலாத நிலையில் உள்ளேன். போதுமான வசதி இல்லாத காரணத்தினால், எனது குழந்தைகளை படிக்க வைத்து தனியார் நிறுவனங்களில் பணிக்கு அனுப்பி எங்கள் குடும்ப சூழ்நிலையை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும், மேலும் குழந்தைகள் படிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி தந்தால், தொடர்ந்து படிக்க வைப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
அதை கண்ட ஆட்சியர் உடனடியாக உங்கள் இரு குழந்தைககளும் கல்வியை தொடர தேவையான வசதிகளை செய்து தருவதாக தெரிவித்து, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் பிரியதர்ஷினியை அப்பள்ளியிலிருந்து விடுவித்து சிறீ மீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்க்கைக் கான மற்றும் அவர் தங்கி பயில் வதற்கு ஏதுவாக அருகில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் நல விடுதியில் சேர்க்கைக்கான பணிகளையும் மேற்கொள்ள உத்தர விட்டார்.
இதுதொடர்பாக ஆட்சியர் கடிதம் எழுதிய நிலையில், கல்வித் துறை வழிகாட்டுதலின்படி மாணவியை சிறீமீனாட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து, அதற்கான ஆணையும் வழங்கப்பட்டு, விடுதி சேர்க் கைக்கான ஒப்புதலும் வழங்கப்பட் டுள்ளது.
தொடர்ந்து, மலரின் இளைய மகன் பரணிநாதன் அப்பகுதியில் 10-ஆம் பயின்று வருவதால் அவரையும் திருப்பத்தூர் நகர பகுதியில் தங்கி பயிலக் கூடிய வசதிகள் உள்ள விடுதியில் சேர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால் மாணவர் தாயுடன் இருந்து படிப்பேன் என கூறியதால் அவருக்கும் கல்வி தொடருவதற்கு ஏதுவாக உதவிகள் செய்து தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை ஏற்றுக்கொண்ட குழந்தைகளின் தாயான மலர் ஆட்சியருக்கு நன்றி தெரி வித்துக்கொண்டு, அரசின் செயல்பாடுகள் மூலம், மனம் நிறைந்துள்ளதாகக் கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தார்.