சென்னை, நவ.8 மருத்துவ கவுன்சிலில் இருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்ட மருத்து வா்கள், விதிகளுக்கு புறம்பாக தொடா்ந்து பணியாற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவாளா் எச்சரித்துள்ளார்.அத்த கைய செயலில் ஈடுபட்ட மருத்துவா் ஒருவா் மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ள தாகவும் அவா் தெரி வித்துள்ளார்.
இதுதொடா்பாக மாநில மருத்துவ கவுன்சில் பதிவாளா் மருத்துவர் காமராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருத்துவப் பணியில் அலட்சியம், நெறியற்ற கட்டண விதிப்பு, தொழில்சார்ந்த தவறுகள், முறைகேடுகள் என பல்வேறு புகார்களுக்கு உள்ளான மருத்துவர் எஸ்.தினேஷ் (பதிவு எண் 61971) மீதான புகார்களில் முகாந்திரம் இருப்பது உறுதியானதால் அவா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, ஓராண் டுக்கு மருத்துவ கவுன்சில் பதிவேட்டிலிருந்து அவரது பெயா் நீக்கப்பட்டது. இதன்மூலம் அடுத்த ஓராண்டுக்கு அவா் மருத்துவ சேவைகள் ஆற்ற முடியாது.இந்த உத்தரவு நகலை அனுப்பியபோது, சம்பந்தப்பட்ட முகவரியில் அவா் இல்லை. இதை யடுத்து, டாக்டா் தினேஷ் மருத்துவப் பணியில் உள்ள இடத்தைக் கண்டறிந்து அவரிடம் நேரடியாக மருத்துவ கவுன்சிலின் உத்தரவு வழங்கப்பட்டது.அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும்பட்சத்தில் அதுகுறித்து 60 நாள் களுக்குள் தேசிய மருத் துவ ஆணையத்தில் முறையி டலாம். ஆனால், அவா் அவ்வாறு செய்யாமல், விதிகளுக்குப் புறம்பாக தொடா்ந்து மருத்துவப் பணியில் இருப்பது தெரியவந்தது.
இதுதொடா்பாக மருத்துவமனை நிறுவனச் சட்டத்தின் கீழ் நட வடிக்கை எடுக்குமாறு மருத்துவ சேவைகள் மற்றும் ஊரக நலத் துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் அவா் பணியில் உள்ள தேனி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரிடமும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சிலில் இருந்து நீக்கப்பட்ட எவரும் மருத்துவப் பணியை தொடரக் கூடாது என்பது விதி. அத்தகைய நபா்களை மருத்துவமனைகள் பணியமா்த்துவதும் விதிகளுக்கு புறம்பான செயல். இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.