ஆரல்வாய்மொழி, நவ.7 கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி,செண்பகராமன் புதூரில் நேற்று
(6-11-2024) பெரியாரியல் பயிற்சி பட்டறை கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது.
பெரியாரியல் பயிற்சி பட்டறை தொடக்க நிகழ்வுக்கு கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை ஏற்று உரையாற்றினார்.
மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் தயாளன், மாவட்டத் துணைச் செயலாளர் அய்சக் நியூட்டன், ஆரல்வாய்மொழி, இந்திரா மணி, மணிமேகலை, கல்லூரி நிதி அலுவலர் பெணில் ,எம்.இ. டி பொறியியல் கல்லூரி முதல்வர் எழில் தினேகா, கல்வியில் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.சிறீலதா ஆகியோர் முன்னிலை ஏற்றனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. குணசேகரன் பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்து உரையாற்றினார். எம்.இ.டி கல்லூரி நிறுவனங்களின் செயல் அதிகாரி முனைவர் கோ. மகாதேவன் வாழ்த்துரை வழங்கினர் பயிற்சிப் பட்டறை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முழு ஒத்துழைப்பு வழங்கி சிறப்பித்தார்.
பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி மா.அழகிரிசாமி தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் முதல் வகுப்பினை நடத்தினார். சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர் முனைவர் வா.நேரு வகுப்படுத்தார்.
இந்திய அரசியல் சட்டம் 51 A (H) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மை என்ற தலைப்பிலும் பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்ற தலைப்பிலும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசுபெரியார் வகுப்பெடுத்தார்.
மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப் பில் ஈட்டி கணேசன் வகுப்பு எடுத்தார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளரும் பெரியா ரியல் பயிற்சிப் பட்டறை ஒருங்கிணைப்பாளருமான இரா. ஜெயக்குமார் பாராட்டுரை வழங்கி பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தினார். மாவட்டத் துணைச் செயலாளர் நல்லபெருமாள் நன்றி கூறினார். சிறப்பாக வகுப்புகளை கவனித்து குறிப்பெடுத்த அய்ந்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பரிசு பெற்றவர்கள்
முதல் பரிசு: பொறியியல் மூன்றாமாண்டு மாணவர் நேச பிரியா, இரண்டாவது பரிசு: பொறியியல் மூன்றாமாண்டு மாணவர் யோக வர்ஷினி, மூன்றாவது பரிசு: பொறியியல் மூன்றாமாண்டு மாணவர் திரிஷா ரோஸ்லின், நான்காவது பரிசு: பொறியியல் மாணவர் காளியம்மாள், அய்ந்தாவது பரிசு: கல்வியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் அனுரேஷ்மா.
பெரியார் பயிற்சிப் பட்டறையில் 75 இருபால் மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். பயிற்சி பட்டறை பயன்கள் குறித்து மாணவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்
ரூ.3,330க்குப் புத்தகங்கள் விற்கப்பட்டன.
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இறுதியாக பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள் கழகப் பொறுப் பாளர்களுடன் குழு படம் எடுத்துக் கொண்டனர்.