சென்னை, நவ. 7- இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனங்களில் பெண் தொழிலாளர் களின் வேலைவாய்ப்புக்கான பங்களிப்பு அதிகப்படுவதற்கான தொழில்துறை தலைவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் – மாநாடு நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்தியாவின் முதன்மையான பன்முகத் தன்மை, சமபங்கு மற்றும் உள்ளடக்க தீர்வுகள் வழங்கும் நிறுவனமான அவதார் ஹ்யூமன் கேபிடல் டிரஸ்ட் மற்றும் பள்ளிக் கரணையில் உள்ள ஆசான் நினைவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து உத்யோக் உத்சவ் 2024-இன் 11ஆவது பதிப்பை சென்னையில் நடத்தியது.
இதில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்புவரை படிக்கும் மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் இளம் பெண்களை மேம்படுத்துவதற்கும், அவர்களின் தொழில் லட்சியங்களை முன்னெடுப்பதற்கும் வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பங்கேற்ற பள்ளிகளை ஆஸ்ட்ரோடெக் ஸ்டீல்சின் நிர்வாக இயக்குநர் அருண் மிராண்டா, இக்கல்லூரியின் முதல்வர் டி.எஸ்.சாந்தி ஆகியோர் சிறப்பித்தனர். புத்ரி திட்டம் மூலம் கடந்த காலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கோயம்புத்தூர் ஆகிய 12 இடங்களில் 20,000-க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளோம் என டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.