ஜப்பானின் உயரமான மலைச்சிகரம் புஜி. இதன் உயரம்12,388 அடி. தலைநகர் டோக்கியோவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ளது. உலகில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் பேர் இச்சிகரத்தில் மலையேற்றம் செய்கின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் 1 – 5க்குள்இச்சிகரம் பனிப்படலத்தால் மூடப்படும். இந்நிலையில் 130 ஆண்டுகளில் முதன்முறையாக இம்முறை முற்றிலும் பனியில்லாத மலையாக காட்சிஅளிக்கிறது. பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஜப்பானில் சில மாதங்களாக வெப்பநிலை அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்.
பூமி நீலநிறமாக தெரிவது ஏன்?
வானம் ஏன் நீல நிறமாக இருக்கிறது என்பதை கண்டுபிடித்தவர் நோபல் பரிசு வென்ற சர்.சி.வி.ராமன். நிறப்பிரிகை காரணமாக சூரிய ஒளியில் இருந்து வரும் நிறங்களில் நீல நிறம் தவிர மற்ற நிறங்களை துாசி மண்டலம் கிரகித்து கொள்வதால் வானம் நீல நிறமாக காட்சியளிக்கிறது என நிரூபித்தார். அதன்படி வெளியிலிருந்து பூமியைக் காண நேர்ந்தால், வானத்தின் நீலம், பூமியின் 70 சதவீதம் படர்ந்திருக்கும் கடல் நீர் மண்டலம், அந்த நீல நிறத்தை பிரதிபலிக்கிறது. அதனால் விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமி நீல நிறமாக தோற்றமளிக்கிறது.