மரப்பலகையால் ஆன உலகின் முதல் செயற்கைக் கோளை ஜப்பானின் கியுட்டோ பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உள்ளங்கை அளவிலான இந்த சிறிய செயற்கைக்கோளின் பெயர் ‘லிக்னோசாட்’. இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் விண்வெளியில் உள்ள பன்னாட்டு விண்வெளி மய்யத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. உலோக செயற்கைக்கோள் பயன்பாட்டு காலம் முடிந்து விண்வெளி குப்பையாக பூமியில் விழும் போது ஏற்படும் ஆபத்தை இதன் மூலம் தடுக்க முடியும்.
மீன்கள் சுவாசிப்பது எப்படி?
நம்மால் நீருக்குள் சுவாசிக்க முடியாது. ஆனால் மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்கள் இதற்கான சிறப்பை பெற்றுள்ளன. மீன்களின் உடல் அமைப்பில் நீருக்குள் இருக்கும் ஆக்சிஜனைப் பிரித்து எடுத்துக்கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றும் செவுள்கள் (கில்ஸ்) என்ற பாகம் உள்ளன. இதன் மூலமே அதன் சுவாசம் நடைபெறுகிறது. கடல் மீன்களின் வாய் வழியாக உள்ளே செல்லும் நீர், செவுள்களில் இருக்கும் நுண்ணிய துகள் வழியாக ஆக்சிஜனை உறிஞ்சி ரத்தத்தில் சேர்க்கிறது. நன்னீர் மீன்கள், செவுள்கள் வழியாகவே நீரை உள்வாங்கிச் சுவாசிக்கின்றன.