மிகப் பெரிய நட் சத்திரங்களுள் ஒன்றான திருவாதிரை நட்சத்திரத்தின் ஒளி மங்கி வருவதாக விஞ் ஞானிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர். தற்போது, அதை மற்றொரு சிறிய நட்சத்திரம் சுற்றி வருவதைக் கண்டறிந்துள்ளனர். இதற்கு, ‘ஆல்பா ஓரி பி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஆப்ரிக்கக் கண்டத்தின் அருகே அமைந்துள்ளது மடகாஸ்கர் தீவு. இங்கு வித்தியாசமான பல உயிரினங்கள் வாழ்கின்றன. இங்கு சமீபத்தில் பூபிஸ் (Boophis) பேரினத்தைச் சேர்ந்த ஏழு புதிய தவளை இனங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தென் அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் வாழும் டானாகர் இனத்தைச் சேர்ந்த புது பறவை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை பழங்கள், பூச்சிகளை உண்டு வாழ்பவை.
பொதுவாகப் பெண் கொசுக்கள் தான் ரத்தத்தை உறிஞ்சி நோயைப் பரப்பும். ஆண் கொசுக்கள் பூக்களின் தேனை மட்டுமே உண்ணும் என்று நம்பப்பட்டு வந்தது. சமீபத்திய ஆய்வில், போதுமான தேன் கிடைக்காதபோது ஆண் கொசுக்களும் ரத்தம் உறிஞ்சும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலக வெப்பமயமாதல் காரணமாக துருவப் பகுதிகளில் பனி உருகுவதால் உறைந்திருந்த கிருமிகள் பல உயிர் பெறுகின்றன. இவை, அங்கு வாழும் பனிக்கரடிகளைத் தாக்கி பாதிப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.