சென்னை, நவ.7- விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் சட்டன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘‘எங்களை பார்ப்பனர்கள் என்று அழைக்கக்கூடாது. அது எங்களை அவமதிப்பது. பிராமணர்கள் என்று தான் அழைக்க வேண்டும்’’ என்கிற மய்யக் கோரிக்கையை முன்னிறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் ஒரு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெற்றிருக்கிறது.
பார்ப்பனர் என்பது தமிழ்ச் சொல். அது அவமானம். பிராமணர் என்பது சமஸ்கிருத சொல். அதுதான் கவுரவம் என்று தமிழ் வெறுப்பை கக்குகிற இவர்கள், நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்லிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.