அக்டோபர் புரட்சி நடந்து 107 ஆண்டுகள் ஆகின்றன.
19-ஆம் நூற்றாண்டில் அடிமைத் தனத்தை ஆக்கப் பொருளாகக் கொண்ட நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், ரஷ்யாவை அடிமைப்படுத்திக் கொண்டிருந்தது. ஜார் மன்னர்களின் கொடுங்கோலாட்சி முடிவுற்று, அக்டோபர் 17, 1917இல் போல்ஸ்விக் புரட்சி என்னும் ரஷ்யப்புரட்சி தோன்றியது.இப்புரட்சியின் விளைவாக அந்நாட்டில் பொதுவுடைமை தத்துவம் மலர்ந்தது.
1917-ஆம் ஆண்டில் தோன்றிய அந்த புரட்சி, பல்வேறு காரணங்களால் எழுந்த ஒன்றாகும். 1894 முதல் 1917 வரை ஆண்ட கடைசி ஜார் மன்னரான இரண்டாம் நிக்கோலஸ், கொடுங்கோன்மை மிக்கவராயிருந்தார். மக்களின் வறுமை மற்றும் நோய்களைப்பற்றி கவலைப்படாத அவர், ரஸ்புட்டீன் என்னும் மதகுருவிற்கு கட்டுப்பட்டவராகவும், தன் மனைவியின் சொல் கேட்பவராகவும் விளங்கினார்.
மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களும் நிலக்கிழார்களால் துன்பத்திற்குட்படுத்தப்பட்டனர். உழைப்பவர்களுக்கு நிலமற்ற நிலையும், பொருளாதாரத் தட்டுப்பாடுகளும் காணப்பட்டன. கல்வியறிவின்மையாலும், நவீன விவசாய முறைகள் கைக் கொள்ளப்படாமையாலும் விவசாயிகள் வருந்தினர். 1861இல் இயற்றப்பட்ட அடிமை மீட்சிச் சட்டமும் அவர்களுக்கு யாதொரு முழுப்பயனையும் வழங்கவில்லை. எனவே உரிமை மற்றும் சமத்துவ எண்ணங்களால் உந்தப்பட்ட அவர்கள், கிளர்ச்சிகளை மேற்கொள்ளலாயினர்.
மார்க்ஸின் மூலதனம் (DAS CAPITAL), மக்கள் மனத்தில் புரட்சிக் கருத்துகளுக்கு வித்தூன்றியது. இதனை ஆதாரமாகக் கொண்டே, லெனின் பொதுவுைடமைச் சமுதாயத்தை அமைக்க எண்ணினார். அவருடைய நாவன்மையாலும் பேச்சாற்றாலாலும் மக்கள் விழிப்படைந்தனர்.
1914-இல் முதலில் புரட்சியாளர்கள், கிரென்ஸ்கி தலைமையில் ஓர் அரசினை தோற்றுவித்தனர். 1917 ஜூலையில் இவர் தலைமையில் ஆட்சி கைப்பற்றப்பட்டது. மத்திய தர வகுப்பினரின் கையில் இருந்த ஆட்சியானது தொழிலாளர்கள், விவசாயிகள் கைகளுக்கு மாற வேண்டுமென இடதுசாரிப் பிரிவினரான சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி விரும்பியது.
தலைமறைவு வாழ்கைக்கு பின் 1917இல் தாயகம் திரும்பிய லெனின், சமதர்மக் கோட்பாட்டை நிறுவ கடும் நடவடிக்கைகள் எடுக்கலானார். வலது சாரி பிரிவினராகவும், மிதவாதிகளாகவுமிருந்த மென்ஷ்லிக்குகளை விட லெனின் தலைமையிலான இடதுசாரிகள்,தொழிலாளர்கள், இளைஞர்கள் நிறைந்த போல்ஷ்விக்குகளின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால் செல்வாக்கு லெனின் கைக்கு மாறியது. அன்று முதல் ரஷ்யா, ‘சோவியத் குடியரசு’ என அறிவிக்கப்பட்டது.
மனித இனம் – நகரக் கட்டமைப்பில் வாழத்துவங்கிய் நாள் முதல் சமத்துவத்திற்கான போராட்டம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தது. இந்த வகையில் சுமார் 4000 ஆண்டுகளுக்குப் பிறகு சமத்துவம் சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட மனித குலத்தை உருவாக்குவதற்காக உலகையே மாற்றிய புரட்சிதான் அக்டோபர் புரட்சி.