அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரிடம் மாவட்ட திராவிடர் கழகம் கோரிக்கை
அரூர், நவ.6 தருமபுரி மாவட்டம், அரூர் பேருந்து நிலையம் ரூ.3.62 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு அவற்றை 24.10. 2024 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.
அப்பொழுது திராவிடர் கழக தலைமை கழக அமைப்பாளர் ஊைம. ஜெயராமன் தலைமையில் மாவட்டத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராசேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பொன்முடி, கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜேஷ், ஊற்றங்கரை ஒன்றிய செயலாளர் சிவராஜ், மாவட்டத் துணைச் செயலாளர் வழக்குரைஞர் வடிவேலன், மகளிரணி பொறுப்பாளர்கள் கல்பனா, உமா மற்றும் இளைஞரணி மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் சாய்குமார், சூர்யா, நாச்சியப்பன், பிரதாப், ராகுல், கவிஞர் கீரை பிரபாகரன் உள்ளிட்ட தோழர்கள் இணைந்து அரூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு- தந்தை பெரியார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டுமாறு தமிழ்நாடு அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியர், மாவட்ட திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன், பேரூராட்சி தலைவர் செயல் அலுவலர் ஆகியோருக்கு கோரிக்கை விண்ணப்பம் அளித்தனர்.
கோரிக்கை விண்ணப்பத்தில் தருமபுரி மாவட்டம் அரூரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு -தந்தை பெரியார் பேருந்து நிலையம் என பெயர் சூட்டுமாறு இதற்குமுன் பலமுறை கோரிக்கை விடுத்தும், 2.10.2024 ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையும்,நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கத் துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாவட்ட ஆட்சியர் அவர்களை கேட்டு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் அரூர் என்றாலே தந்தை பெரியா ருக்கு தாய் வீடு போல அந்த பகுதியில் அவர் சுற்றிச் சுழன்று கிராமம் கிராமமாகச் சென்று பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். அந்த வகையில் அவர் கால் படாத கிராமமே இல்லை என்று சொல்லலாம் இப்போது பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ள இடத்தில் பெரியார் பெயரில் பூங்கா அமைத்து செயல்பட்டு வந்தது. இங்கே தான் திராவிட இயக்க தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற தலைவர்கள் எல்லாம் பெரியார் பூங்கா திடலில்தான் சொற்பொழிவாற்றியுள்ளார்கள். பெரியார் பூங்கா, மனமகிழ் மன்றத்தை அறிஞர் அண்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார்கள்.
எனவே, இத்தனை சிறப்பு வாய்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள அரூர் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு, பெரியார் பேருந்து நிலை யம் என பெயர் சூட்டுமாறு தாய்க் கழகமான திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என விண்ணப்பத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தினை படித்துப் பார்த்த அமைச்சர் கே.என்நே.ரு அவர்கள் பெரியார் பெயரை வைப்பதற்கு ஆலோசிப்பதாக கூறியுள்ளார். மாவட்ட கழகத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட கோரிக்கை தீர்மானம் முதலமைச்சர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.