6.11.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தெலுங்கு பேசும் மக்களை இழிவுபடுத்தி பேசியதாக, நடிகை கஸ்தூரி மீது காவல்துறையில் புகார்.
* வக்பு வாரிய மசோதாவுக்கான நாடாளுமன்ற குழு தலைவர் பாரபட்சமாக நடந்து கொள்கிறார், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவைத் தலைவரிடம் புகார்.
* பொது நலன் என்ற பெயரில் தனியாரிடம் இருந்து எல்லா சொத்துக்களையும் கையகப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.
* உ.பி.யில் 2004ஆம் ஆண்டு சமாஜ்வாடி அரசால் நிறைவேற்றப்பட்ட மதராசா பள்ளிக்கூடங்களுக்கான சட்டம் செல்லும்; அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல. அலகாபாத் நீதிமன்ற தடையை தகர்த்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
* 2026 சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடர்வோம்: திருமாவளவன் திட்டவட்டம்
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ஜாதிவாரி கணக்கெடுப்பு அனைவருக்கும் நீதியை பெற்றுத் தரும், தெலுங்கானா துணை முதலமைச்சர் நம்பிக்கை.
* தெலங்கானா அரசு நடத்தும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் அனைத்து பிற்படுத்தப்பட்டோரும் பங்கேற்று விவரங்களை தர வேண்டும், பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் வேண்டுகோள்.
* ஜாதியால் நிகழ்ந்த துயரங்களை வெளிக்காட்டும் எக்ஸ்-ரே தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு, ராகுல் பேச்சு. முதலமைச்சர் ரேவந்துக்கு பாராட்டு.
* மகாராட்டிரா மாநில தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை, சரத் பவார் பேச்சு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரையிலான நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அறிவிப்பு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 50 சதவீத இட ஒதுக்கீட்டின் செயற்கையான தடையை தகர்ப்போம். இந்தியாவில் ஜாதிப் பாகுபாடு “தனித்துவமானது” மற்றும் அநேகமாக உலகின் மிக மோசமான ஒன்றாகும். என ராகுல் அய்தராபாத்தில் பேச்சு.
* கோவையில் புதிய ரயில்வே கோட்டம் அமைய வேண்டும், தொழிலதிபர்கள், அமைப்புகள் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு
* ஜார்கண்ட் தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு உருவாக்கம், பழங்குடியினர் உரிமைகள், சமூக நீதி ஆகியவற்றை இந்தியா கூட்டணி உறுதியளித்துள்ளது.
* அரசுப் பணிகளில் பெண்களுக்கு 33 லிருந்து 35 சதவீத இடஒதுக்கீடாக அதிகரிக்க மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
டைம்ஸ் ஆப் இந்தியா:
* நாட்டிலேயே மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் தான் வேலை செய்யும் பெண்கள் (43%) அதிகம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.
– குடந்தை கருணா