பெங்களூருவில் செயல்பட்டு வரும் பெல்-இந்தியா நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் இன்ஜினியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 383/PE-I/HR/ES/2024-24
பணி: Project Engineer-1(Mechanical)
காலியிடங்கள்: 5
ஊதியம்: மாதம் ரூ.40,000 – 50,000
வயது வரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதுகுறித்த விவரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.400 செலுத்த வேண்டும். கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கி மூலம் இணையம் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 11.11.2024
பெங்களூரு பெல் நிறுவனத்தில் திட்டப் பொறியாளர் பணி
Leave a comment