அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு டிசம்பரில் சிறப்பாக நடத்துவோம் திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு

1 Min Read

திருச்சி, நவ. 6- டிசம்பர் 28, 29இல் திருச்சியில் அகில இந்திய பகுத்தறிவாளர்கள் மாநாடு (FIRA) நடைபெறுகிறது மாநாட்டுப்பணிகள், ஏற்பாடுகள்குறித்து ஆலோசித்திட திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் திருச்சி பெரியார் மாளிகையில் 1.11.2024 வெள்ளி மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. கூட் டத்திற்கு திருச்சி மாவட்ட பகுத் தறிவாளர் கழக் தலைவர் பா.லெ.மதிவாணன் தலைமை ஏற்றார். மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பி.மலர்மன்னன் வரவேற்று பேசினார்.

கலந்துரையாடல் கூட்டம் கூட்டப்பட்டதின் நோக்கத்தை மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு பழனிவேல் எடுத்துரைத்தார். தொடர்ந்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் செல்வ. மீனாட்சி சுந்தரம் மாநாடு தொடர்பான செய்திகளை எடுத்து ரைத்தார். பதிவுகள் செய்வது எப்படி என்பது பற்றியும், மாநாடு ஏற்பாடுகள் பற்றியும் எடுத்துக் கூறினார். அடுத்து வருகை புரிந் தவர்களில் இரா.மணியன், பேரா.கிருட்டிணமூர்த்தி,மா.ராம்தாஸ், மா.குணசேகரன், ம.சேவியர், விடுதலை செல்வம், திருநாவுக்கரசு, ராஜாராம் ஆகியோர் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.

தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், வி.மோகன் ஆகியோர் மாநாட்டின் அவசியம், ஏற்பாடுகள் பற்றிய செய்திகளை கூறினார்கள்.மாநாட்டு விளம்பரம், சுவரெழுத்து பற்றியெல்லாம் விரிவாக கூறினார்கள்.
இறுதியில் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் மாநாடு, ஏற்பாடுகள், மாநாட்டு நிகழ்வுகள், பற்றியெல்லாம் குறிப்பிட்டு நன்கொடை திரட்டும் முறை, விளம்பரம் செய்யும் வகை என அனைத்தையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மாவட்ட தலைவர் மதிவாணன் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிப்பதாக உருதியளித்தார். மாநாட்டு சுவ ரெழுத்து பற்றி மாவட்ட செயலாளர் மன்னர் மன்னன் எடுத்துக்கூறினார்.
இறுதியில் மாவட்ட பொறுப் பாளர் ஜோ.பென்னி நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *