சிங்.குணசேகரனின் வாழ்விணையர் தேன்மொழி மறைவு!
‘விடுதலை’ செய்திப் பிரிவில் பணியாற்றிய சிங்.குணசேகரனின் வாழ்விணையர் தேன்மொழி (இவரும் ‘விடுதலை’ அலுவலகத்தில் பணியாற்றியவரே) உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (4.11.2024) மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அவருடைய உடலுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் திடல் மேலாளர் ப.சீதாராமன் ஆகியோர் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தி, குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.