திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர் ச.இராசேந்திரனின் தாயார் பேச்சியம்மாள் (வயது 61) காலமானார். செய்தியறிந்த கழகத்தலைவர் ஆசிரியர், கழகத்துணைத்தலைவர் கவிஞர்.கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இரா.ஆவுடையப்பன் ஆகியோர் தொலைபேசியில் ஆறுதலும் இரங்கலும் தெரிவித்தனர்.
2.11.2024 அன்று காலை தச்சநல்லூர் இல்லத்தில் காப்பாளர் தூத்துக்குடி.இரா.காசி தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் மதுரை.வே.செல்வம், மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், காப்பாளர் சீ.டேவிட்செல்லத்துரை, காப்பாளர் இரா.காசி, பொதுக்குழு உறுப்பினர் மும்பை தயாளன், பொதுக்குழு உறுப்பினர் கீழப்பாவூர் அய்.இராமச்சந்திரன், உறவினர்கள் அமுதா, ச.கர்ணன், ஆகியோர் இரங்கல் உரையாற்றினார். இறுதியில் தாயாரின் பண்பு நலன்களை விளக்கி மாவட்டத் தலைவர் ச.இராசேந்திரன் உரையாற்றினார்.
காப்பாளர்சி.வேலாயுதம், தென்காசி மாவட்டச் செயலாளர் தெ.சண்முகம் உள்ளிட்ட பொறுப்பாளர்களும், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, மாவட்ட தோழர்களும் ஏராளமானோர் பங்கேற்றார்கள். எவ்வித மூடச் சடங்குகள் இல்லாது இறுதி ஊர்வலம் புறப்பட்டு மின் இடுகாட்டில் எரியூட்டப்பட்டது.
நெல்லை பேச்சியம்மாள் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை

Leave a Comment